கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
கம்பளை பகுதியில் நேற்றிரவு முதல் அடை மழை பெய்துவருகின்றது. இந்நிலையிலேயே இன்று அதிகாலை குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டுக்கு பெரும் தேசம் ஏற்பட்டுள்ளது. பிரதேச வாசிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்ணுக்குள் புதையுண்டனரை மீட்டனர். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1