இராஜாங்க அமைச்சு பதவியை துறக்க தயார்: தயாசிறி தடாலடி!

Date:

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  தயாசிறி ஜயசேகர, தேவைப்பட்டால் தனது இராஜாங்க அமைச்சர் பதவியை துறக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கிடையிலான கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (06) துணை சபாநாயகர் ரஞ்சித் சியாம்பலபிட்டியவின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்ததாக அறியப்படுகிறது.

குழு கூட்டத்தில் பங்கேற்ற இரண்டு இராஜாங்க அமைச்சர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சித்து தயசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட அறிக்கை பொருத்தமானதல்ல என்று கூறியுள்ளனர்.

அரசாங்கத்தில் இருக்கும்போது இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவதை ஏற்க முடியாதென அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர, தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து பதவி வகிக்க முடியும் என்று கூறியுள்ளதாக அறியப்படுகிறது.

இருப்பினும், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை என்று கலந்துரையாடலில் பங்கேற்ற உறுப்பினர்கள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அன்று பிற்பகல் நடைபெற்ற கட்சியின் அரசியல்குழு கூட்டத்திலும் இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...

திருப்பரங்குன்றம் கல்த்தூணில் தீபம் ஏற்றப்பட்டது

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்த்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்