மேட்டுப்பாளையம் அருகே ஆண்டுக்கு ஒருமுறை இரவில் சில மணி நேரம் மட்டுமே பூக்கும் பிரம்மகமலம் மலரை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வணங்கி சென்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருக்கக்கூடிய சேரன் நகர் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணியம் – பேபி தம்பதியினர். இவர்களது வீட்டு தோட்டத்தில் தனது நண்பர் ஒருவர் மூலம் பெங்களூரு நகரில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த மலர் செடியை கொண்டு வந்து தனது வீட்டு தோட்டத்தில் நடவு செய்துள்ளார்.
இலைகள் மூலம் வளரும் தன்மை கொண்ட இந்த செடியில் தற்போது ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூத்துள்ளது. குறிபிட்ட சில மணி நேரமே செடியில் உயிர்ப்புடன் இருக்கும் தன்மை கொண்ட பிரம்ம கமலம் மலர் மற்றும் நிஷா காந்தி மலர் எனவும் கூறப்படுகிறது.
இந்த மலர் அதிக வாசனை கொண்டதாக இருப்பதால் பூக்கும் போது தனது வாசனையால் அனைவையும் தன் பக்கம் ஈர்க்கும் அளவுக்கு நறுமணம் கொண்டது. பொதுவாக குளிர்பிரதேசமான ஹிமாலயா, காஷ்மீர் போன்ற பகுதிகளிலும் சீனாவிலும் இந்த மலர்களை அதிகமாக காண முடியும்.
ஆனால் சில சமயங்களில் மட்டுமே வெப்பம் அதிகமுள்ள இதுமாதிரியான சில பகுதிகளில் பூக்கிறது. அந்த வகையில் மேட்டுப்பாளையம் சேரன் நகரில் உள்ள பேபி என்பவரது வீட்டில் இரவு10,00 மணிக்கு பூத்த இந்த பிரம்ம கமலம் மலரை அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்
மேலும் இந்த மலர் பூக்கும் போது அதன் முன் நின்று இறைவனை வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. இரவு பத்து மணிக்கு பூத்த மலரானது காலை 4 மணி வரை மட்டுமே உயிர்ப்புடன் இருக்கும் அதன் பின்னர் அந்த மலர் சுருங்கி விடும் எனவே இதனை அந்த பகுதி மக்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.