24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
உலகம் தொழில்நுட்பம்

தண்ணீர் காலாவதி ஆகுமா? தண்ணீர் போத்தல் இருக்கும் காலாவதி திகதி எதற்கு?

எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடாது என்றாலும், தண்ணீர் பாட்டிலில் இருக்கும் காலாவதி திகதி அந்த பாட்டிலுக்கானது மட்டுமே. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் தண்ணீர் உடன் வினைப்புரியக்கூடும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களில் காலாவதி திகதி அச்சிடப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டில், அமெரிக்க மாநிலமான நியூஜெர்சி தான் பாட்டில் தண்ணீர் உட்பட அனைத்து உணவுப் பொருட்களுக்கும் உற்பத்தி திகதியிலிருந்து அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்குள் காலாவதி திகதியைக் கொண்டு இருக்க வேண்டும் என்ற சட்டத்தை இயற்றிய முதல் மாநிலம் ஆகும்.

இந்த சட்டம் இயற்றப்பட்டபோது, உணவுப்பொருட்களில் ​​காலாவதி திகதியை அச்சிடுவது நாடு முழுவதும் உள்ள பாட்டில் நீர் உற்பத்தியாளர்களுக்கான தொழில்துறை தர நிர்ணயமாக மாறியது.

இருப்பினும், இந்த சட்டம் பின்னர் மாற்றப்பட்டது, மேலும் அமெரிக்காவில் தற்போதைய எந்தவொரு சட்டமும் உற்பத்தியாளர்கள் தண்ணீர் பாட்டிலில் காலாவதி திகதியை அச்சிட வேண்டும் என்பதை அறிவுறுத்துவதில்லை.

இருப்பினும், பொதுவாக குறிப்பிட்ட காலாவதி திகதியைத் தாண்டிய பிறகு பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது நல்லதல்ல என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஏனென்றால், காலப்போக்கில் பிளாஸ்டிக் தண்ணீரில் கசியத் தொடங்கி, ஆன்டிமோனி மற்றும் பிஸ்பெனால் A (BPA) போன்ற வேதிப்பொருட்களால் அதை மாசுபடுத்தக்கூடும்.

பாட்டில் தண்ணீரை நீங்கள் தினசரி குடிப்பவராக இருந்தால், இந்த பிளாஸ்டிக் கலவைகள் உங்கள் உடலில் மெதுவாகக் குவிந்துவிடும், இது குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுவாச செயல்பாடு ஆகியவற்றுக்கு தீங்கு விளைவிக்கும்.

முடிந்தவரை நீண்ட நாட்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த வேண்டாம் என பரிந்துரைக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment