தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான டாப்சி, அடுத்ததாக ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.
தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகும் ‘சபாஷ் மித்து’, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை டாப்சி புதிதாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ஸ்வரூப் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மிஷன் இம்பாசிபிள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தை தமிழ் மற்றும் இந்தியில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டு உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.