மன்னார் மாவட்டத்தில் மூன்றாவது நாளாக கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணி-தொடர்ந்தும் ஆர்வம் காட்டும் மக்கள்!

Date:

மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று புதன் கிழமை (7)  3 ஆவது நாளாகவும் இடம் பெற்றது.
மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு   ஆகிய 4 பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம் பெற்றது.கடந்த இரு தினங்களை விட இறுதி நாளான இன்று புதன் கிழமை (7) அதிக எண்ணிக்கையான 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் கட்டியுள்ளனர்.
மேலும் கிராம அலுவலகர்கள் உற்பட அரச திணைக்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.நாளைய தினம் வியாழக்கிழமை(8) மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி இடம் பெறவுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஆயிரம் நபர்களுக்கு செலுத்துவதற்காக   கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட நிலையில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சுகாதார துறை மற்றும் அரசாங்க அதிபர் உரிய திணைக்கள அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மன்னார் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்