யாழ் நகரில் ஒன்றரை ஏக்கர் காணியை இராணுவத்திற்கு வழங்கும் முடிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடுமையாக எதிர்த்துள்ளது.
யாழ் நகரில் வைத்தியசாலைக்கு முன்பாக, யாழ் போதனா வைத்தியசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றரை ஏக்கர் காணியை, இராணுவத்திடம் கையளிக்கும்படி சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக அந்த காணி பயன்படுத்தப்பட வேண்டும், அந்த காணி இராணுவத்திடம் ஒப்படைக்கப்படுவதை எதிர்க்கிறேம் என நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது சுட்டிக்காட்டினார்.




