ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா – ஒரே நாளில் 737 பேர் உயிரிழப்பு!

Date:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,378 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56.58 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 737 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 316 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 51 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4.17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்