25.3 C
Jaffna
January 22, 2025
Pagetamil
ஆன்மிகம்

சந்திராஷ்டமமும்.. 12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரமும்!

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும். இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான செயல்களை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கீழ்க்கண்ட பரிகாரங்களைச் செய்யலாம்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம். ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம். வழிபாட்டிற்குப் பிறகு சந்திராஷ்டம நாட்களில் தவிர்க்க முடியாத காரியங்களைச் செய்தால் ஓரளவாவது தடைகள் அகலும். தக்க விதத்தில் வெற்றியும் வந்து சேரும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment