85 பேருடன் தரையிறங்க முற்பட்ட பிலிப்பைன்ஸின் இராணுவ விமானம் விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த விபத்து நடந்தது.
தெற்கு பிலிப்பைன்ஸின் சுலு மாகாணத்தின் ஜோலோ தீவில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளான சி -130 விமானத்தின் உடைந்த பாகங்களிற்குள் இருந்து அதுவரை 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஆயுதப்படைகளின் தளபதி ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா தெரிவித்தார்.
அண்மையில் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்து பட்டம் பெற்றவர்களே அதிகளவில் இந்த விமானத்தில் இருந்தனர். முஸ்லீம் பெரும்பான்மை பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் ஒரு கூட்டு பணிக்குழுவின் ஒரு பகுதியாக ரெஸ்டிவ் தீவுக்கு அனுப்பப்பட்டனர். .
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1