ஜப்பானில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி – 20 பேர் மாயம்!

Date:

ஜப்பானில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி மாயமானோரை தேடும் பணியில் போலீசார் உள்ளிட்ட மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அடாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதில், கடந்த 3 நாட்களாக பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ளனர். இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.

மழை நீரும், மண்ணும் கலந்து சரிந்ததில் ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணுக்குள் புதைந்தன. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். இதுவரை 20 பேரை காணவில்லை. மேலும் பலர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதுவரை 2 உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இந்தப் பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா அதிரடி படை ஒன்றை அனுப்பியுள்ளார். போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

முல்லைத்தீவில் இரு மீனவர்கள் மாயம்

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல்...

யாழில் பியர் போத்தலால் தாக்கப்பட்டவர் பலி

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலால் தாக்கப்பட்டதில் 36 வயதுடைய நபர் ஒருவர் கொல்லப்பட்டதாக...

ரீல்ஸ் எடுக்க 60 அடி உயர தண்ணீர் தொட்டியில் ஏறிய சிறுவன் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தின் சித்தார்த் நகரில், ரீல்ஸ் எடுப்பதற்காக 60 அடி உயர...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்