சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் டிவிக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. ஷாருக் கான், சல்மான் கான் தொடங்கி தமிழில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி வரை பல ஹீரோக்கள் சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
சினிமாவில் கிடைப்பதை விட டிவி நிகழ்ச்சிகள் மூலமாக அதிகம் பணம் சம்பளமாக கிடைப்பதும் இத்தனை ஹீரோக்கள் டிவி பக்கம் திரும்ப காரணம். அந்த வரிசையில் தற்போது பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இணைய உள்ளார் என செய்தி தற்போது பரவி வருகிறது.
கலர்ஸ் டிவி சமீபத்தில் ட்விட்டரில் வெளியிட்டு வரும் பதிவுகள் சிலவற்றில் ரன்வீர் பற்றிய குறிப்புகள் இருப்பது தான் இத்தகைய செய்தி பரவ காரணம். அவர் The Big Picture என்ற ஷோவை தான் தொகுத்து வழங்குகிறார். அந்த ஷோ போட்டியாளர்களின் அறிவு மற்றும் பார்த்ததை நினைவு கொள்ளும் திறன் ஆகியவற்றை சோதிக்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரொமோ வீடியோ ஷூட்டிங்கிலும் சமீபத்தில் நடந்து முடிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் டீசருடன் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.