த்ரில்லரில் பயமுறுத்தும் ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தின் டீசர் வெளியீடு!

Date:

நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லக்‌ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகியுள்ளார்.

நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை Etcetera Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு தயாரிப்பாளர் தனக்கு தெரியாமல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார் என இயக்குனர் ஜமீல் நீதிமன்றம் சென்று பிரச்சனை முடிவுக்கு வந்தது.

இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே நீண்ட நாள் கழித்து இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படத்தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லரில் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

ஹரக்கட்டா விவகாரம்: பிக்கு ஊடாக உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சப்பணம் பரிமாற்றம்?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரான 'ஹரக்கட்டா'வின் மனைவியிடமிருந்து இலஞ்சமாகப் பெறப்பட்ட 1,200...

பிரதியமைச்சர் எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண எம்.பிக்கு பிடியாணை

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...

தன்னைத்தானே சுட்டு உயிர்மாய்த்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்