ரஷ்யாவில் மேலும் 23,218 பேருக்கு கொரோனா பாதிப்பு

Date:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.ரஷ்யாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,218 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 55.61 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மேலும் 679 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 565 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு கொரோனா தொற்றில் இருந்து 50.35 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3.89 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

வடகொரிய அணு ஆயுத உற்பத்தியில் தீவிர அதிகரிப்பு!

வட கொரியா தனது அணு ஆயுத உற்பத்தித் திறனில் 'மிகவும் தீவிரமான...

அமெரிக்க தடையை கடந்து சென்ற ஈரானின் சூப்பர் டாங்கர்

போருக்கு மத்தியில் இப்பகுதியில் நிலவும் அமெரிக்கத் தடைகள் மற்றும் இராணுவ அழுத்தத்திற்கு...

ஈரான் மீதான முற்றுகை தொடர்ந்தால் செங்கடல் வர்த்தகத்தை முடக்குவோம்!

ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை தொடர்ந்தால், செங்கடல், வளைகுடா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்