இந்தியாவில் மேலும் 48,786 பேருக்கு பாதிப்பு..

Date:

நாடு முழுவதும் 24 மணி நேரத்தில் 48,786 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.1,005 பேர் உயிரிழந்து உள்ளதுடன் 61,588 பேர் தொற்றின் பிடியில் இருந்து விடுபட்டு குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,786 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 3 ஆயிரம் அதிகம். இதுவரை 3,04,10,577 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 1005 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக, இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,99,459 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 61,588 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,94,88,918 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 5,23,257 பேர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 33,57,16,019 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி அமைதிப் போராட்டம்

செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி...

இனப்படுகொலை வரலாற்றுத் தடயங்களை நாமே அழித்துவிட்டு இளையோரை வரலாறு தெரியாதவர்கள் என்று விமர்சிப்பது பெரும் அபத்தம் பொ. ஐங்கரநேசன் காட்டம்!

“இளைய தலைமுறை தமிழ்த்தேசிய அரசியலுடன் இல்லை அவர்களுக்கு எமது போராட்டத்தின் வரலாறும், நாம்...

MSC Elsa 3 கப்பல் விபத்து: கடலில் சிந்திய பிளாஸ்டிக் துகள்களில் 43-க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் சேகரிப்பு

கேரளக் கடற்கரைக்கு அருகே மூழ்கிய MSC Elsa 3 கப்பலிலிருந்து கடலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்