2020 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு சுகாதார நடைமுறைகளை பேணி பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.
பரீட்சைக்கு வருகைதரும் மாணவர்களின் வெப்பநிலை அளவிடப்படுவதுடன், முககவசம் அணிந்து, கைகளை கழுவிய பின்னர் பரீட்சை நிலையங்களிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு வவுனியாவில் 6631 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதாக வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் மு. ராதாகிஸ்ணன் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இவ்வருடத்திற்கான பரீட்சையில் 3771 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள். 2860 பேர் வெளிவாரியாகவும் தோற்றுகின்றனர். அவர்களிற்காக 52 பரீட்சை நிலையங்களும், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த பரீட்சையில் நாடளாவிய ரீதியில் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 352 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர். நாடு பூராகவும் 4 ஆயிரத்து 513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.