26.2 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

Hyundai நிறுவனத்தின் 1 கோடியாவது காரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தந்தையை பின்பற்றி தனயன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஹூண்டாய் நிறுவனத்தின் 1 கோடியாவது தயாரிப்பை வெளியிட்டார்.

மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதி கலைஞர் தொடங்கிவைத்த ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் நிறுவனத்தின் ஒரு கோடியாவது வாகனத்தை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இயக்கி வைத்தார்.

காலமான திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி 1998ம் ஆண்டு, சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றி வருகிறத. கடந்த 25 ஆண்டுகளில் ஒரு கோடி கார்கள் உற்பத்தி செய்துள்ளது.

தற்போது ஹூண்டாய் தயாரிப்பான அல்கஸார் மாடல் கார் ஒரு கோடியாவது காராக வெளிவருகிறது. இதை ஹூண்டாய் நிறுவனம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைக்கொண்டு அறிமுகப்படுத்தி சிறப்பு செய்துள்ளது.

அதன்கான நிகழ்வு நேற்று (ஜூலை 30) நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலநதுகொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்த பெருமைமிகு தருணத்தின் அடையாளமாக காரின் முன்பகுதியில் தனது கையொப்பமிட்டு காரை இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மு.க.ஸ்டாலின், “முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் தொழில் வளர்ச்சியில் இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றினார். அதேபோல் நான் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தொழில்வளர்ச்சியில் முதல் மாநிலமாக மாற்றுவேன். இதற்கு ஹூண்டாய் நிறுவனம் போலவே அனைத்து நிறுவனங்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.

இந்நிறுவனம் தமிழகத்தில் அதிக முதலீடு செய்த நிறுவனம் மட்டுமல்ல. கூகுள் வரைபடத்தில் ஸ்ரீபெரும்புதூரை அடையாளம் காட்டிய நிறுவனம்.” எனப் பேசினார்.

பின்பு, நவீன தொழில்நுட்பத்தில் உயர்தரத்துடன் உருவாக்கப்பட்ட பேட்டரி காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஹூண்டாய் தொழிற்சாலை வளாகத்தில் வசந்தராணி என்னும் மரக்கன்று ஒன்றை முதலமைச்சர் நட்டுவைத்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment