28.4 C
Jaffna
March 9, 2025
Pagetamil
உலகம்

மாலதீவிற்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பயணிகளுக்கு அனுமதி!

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர் மாலதீவிற்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக சமூக வலைதளங்களின் பிரபலங்களின் புகைப்படங்கள் நிரம்பி வழிந்தன பொலிவுட், கோலிவுட் என சினிமா பிரபலங்களும், விளையாட்டுப் பிரபலங்களும் குடும்பத்தோடு மாலத்தீவுக்கு படையெடுத்து, அங்கிருந்து தான் புகைப்படங்களை எடுத்து தள்ளினார்கள். இந்நிலையில் கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக மே மாதம் 13 ஆம் திகதி இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவு அரசு பயணத் தடை விதித்தது.

இந்தியாவில் கொரோனாஇரண்டாவது அலை குறைந்து வருவதால் வருவதால் உலக நாடுகள் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. கொரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போகமுடியாமல் முடங்கிக் கிடந்த பிரபலங்களின் சுற்றுலா மனநிலையை மீண்டும் தூண்டும் விதமாக தற்போது வரும் 15ம் திகதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மாலத்தீவுகளுக்கு வர அனுமதி வழங்கப்படும் என அதிபர் இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார்.

கொரோனோ சோதனையில் நெகடிவ் சான்றிதழ் மட்டும் இதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து ஒரு லட்சம் பயணிகளுக்கு மேல் மாலத்தீவு சென்று உள்ளனர். மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு ஆகியவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்கள். மேலில் இருக்கும் வெள்ளி ஜும்மா மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று.

மாலதீவிற்கு கொச்சியில் இருந்து கப்பல் மூலமாகவோ, சென்னையில் இருந்து விமானம் மூலமாகவோ செல்லலாம். கப்பல் மூலம் செல்வதற்கு ஒன்றில் இருந்து இரண்டு நாட்கள் ஆகும். விமானம் மூலம் செல்வதற்கு இரண்டு மணிநேரம் ஆகும். சென்னையில் இருந்து சீசனுக்கு ஏற்ப டிக்கெட் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. அதேபோல், விமான டிக்கெட்டுகளுடன் கூடிய முழு பேக்கேஜ்களும் பல கிடைக்கின்றன.

இந்தியர்களுக்கு முன்னதாகவே விசா தேவையில்லை. பயணம் செய்தாலே அங்கு 90 நாள்களுக்கான விசா வழங்கப்படும். அதற்காக ஒரிஜினல் பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களும் தேவை. தற்போது கொரோனா நேரம் என்பதால், அதற்கான சில கட்டுப்பாடுகளும் தற்போது உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

Pagetamil

சரணடைந்தார் ஜெலன்ஸ்கி!

Pagetamil

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!