அஷ்வின் – புகழ் இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

Date:

அஷ்வின் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில், இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஷ்வினும், புகழும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘என்ன சொல்ல போகிறாய்’ என தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தில் அஷ்வின் ஹீரோவாகவும், புகழ் காமெடியனாகவும் நடிக்கின்றனர். விளம்பர படங்களை இயக்கி பிரபலமான ஹரிஹரன் இப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். விவேக் – மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

ashwin-34

டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கும் இப்படம், காதல், காமெடி கலந்து உருவாக உள்ளது. இப்படத்தில் அஷ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூலை 19-ந் தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்