ஹொட்டலை விட்டு வெளியேறிய 3 இலங்கை வீரர்கள் இடைநீக்கம்!

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக, நிரோஷன் டிக்வெல்ல ஆகியோரை இங்கிலாந்து குழாமிலிருந்து, இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் உயிர் குமிழியை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக எஸ்.எல்.சி தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்,

“அடுத்த விமானத்தில் நாங்கள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவோம், அவர்கள் விசாரணை நிலுவையில் உள்ளது” என்று ஷம்மி சில்வா  தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) டர்ஹாம் வீதிகளில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, உயிர்க் குமிழி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி வீரர்கள் வெளியில் சென்றுள்ளனர்.

இரு அணிகளிற்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (29) டர்ஹாமில் நடைபெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்