தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் கருத்தால் சர்ச்சை!

Date:

பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசி போட மறுப்பவர்கள் இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள் எனக்கூறி அந்நாட்டு அதிபர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவது கோவிட் தொற்று மோசமாக பரவி வருகிறது. கோவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களை கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம்.

ஏற்கெனவே பெருந்தொற்று பேரிடரால் அவதியுற்று இருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போடமாட்டேன் எனக்கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடுங்கள்.

இந்தியாவுக்கு செல்லுங்கள் அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்கு செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள் அமெரிக்காவுக்கு கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவை, தடுப்பூசியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் செல்லக்கூடிய நாடாக அவர் முன்மொழிந்திருப்பதும், தடுப்பூசியை போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு பதிலாக அதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதும் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

வடமாகாண புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸமா அதிபர் தினேஸ் கருணாணாயக்க இன்றையதினம் தனது...

முன்னாள் அமைச்சரின் மனைவி மாடியிலிருந்து தவறிவிழுந்து பலி

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி, 55 வயதான தேஷானி குணரத்ன,...

திடீர் ஆய்வில் பயன்பாட்டிற்கு தகுதியற்ற 28 வாகனங்கள் சிக்கின

தலவாகல்ல பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, ​​28 வாகனங்கள் இயக்கத்திற்குத் தகுதியற்றவை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்