தனுஷ் 43 படத்தின் புதிய அப்டேட் வெளியீடு!

Date:

இயக்குனர் கார்த்திக் நரேன் அடுத்ததாக தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, கிருஷ்ணகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் (GV Prakash) இசையமைக்கிறார். தனுஷ் 43 (Dhanush) படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதற்கிடையில் தி க்ரே மேன் படப்பிடிப்புகளுக்காக அமெரிக்கா சென்றார் தனுஷ். அவர், நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் கர்ணன் வெளியானது, கடந்த வாரம் ஜகமே தந்திரம் வெளியானது. ஆனால், இப்படங்களின் புரொமொஷனுக்காகக்கூட தனுஷ் தமிழகம் வரவில்லை. தற்போது, ’தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தனுஷ் தமிழகம் வரவிருக்கிறார்.

இதனை, உறுதி செய்துள்ளது தனுஷ் 43 படத்தை தயாரிக்கும் சத்யஜோதி ஃபிலிம்ஸ். இன்று தனுஷ் மாஸ்க்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘தனுஷ் 43’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது.

Image

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்