நடிகர் ஜெயம் ரவி மீண்டும் ‘பூலோகம்’ படத்தின் இயக்குனருடன் கூட்டணியா அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி சினிமாவில் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்சில் வெற்றிகரமாக முன்னேறி வருகிறார். ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான ‘பூமி’ திரைப்படம் தோல்வியைத் தழுவியது. தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
ஜெயம் ரவி இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்த பூலோகம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. பாக்சிங் கதைக்களைத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட அந்தப் படத்திற்காக ஜெயம் ரவியை உடலை கச்சிதமாக மெருகேற்றினார். இந்நிலையில் மீண்டும் கல்யாண் கிருஷ்ணன் உடன் ஜெயம் ரவி கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனராம்.
ஜூலை மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மணி ரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி ‘பொன்னியின் செல்வன்’ படத்திலும் நடித்து வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு கல்யாண் உடன் கூட்டணி அமைக்கலாம் என்று ஜெயம் ரவி திட்டமிட்டிருந்தார். ஆனால் பொன்னியின் செல்வன் பெரிய படம் என்பதால் அதற்கு முன்னர் இந்தப் படத்தை முடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஜெயம் ரவி இயக்குனர் அகமதுவுடன் ‘ஜன கன மண’ படத்திலும் நடித்து வருகிறார்.