தமிழர் பிரச்சனையில் சூமில் தீர்வு காண முற்படும் செல்வம்: கட்சி தலைவர்கள் யாருக்குமே தெரியாது!

Date:

ஒருமித்த நிலைப்பாட்டில் தமிழ் மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காணும் வகையில் தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களிற்கிடையில் சூம் வழி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு அனுப்பியுள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தெரிவித்துள்ளது.

மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், கவி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்ததாக ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அறிக்கை நேற்று (25) மூலம் தெரிவித்திருந்தார்.

நாளை (27) சூம் வழியாக கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று (26) காலையில், மேலே பெயர் குறிப்பிட்ட தலைவர்களில் குறைந்தது இரண்டுக்கும் குறையாதவர்கள், தமக்கு அப்படியான கடிதம் எதுவும் வரவில்லை, இப்படியான திட்டம் எதுவும் தம்முடன் கலந்துரையாடப்படவில்லை, இதைப்பற்றி தமக்கு எதுவுமே தெரியாதென தமிழ்பக்கத்திடம் தெரிவித்தனர்.

அத்துடன், தம்முடன் கலந்துரையாடாமல் இப்படியான முக்கிய அறிவிப்புக்களை வெளியிடும் ரெலோவின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை தொடர்பான அதிருப்தியையும் வெளியிட்டனர்.

இது குறித்து இன்று காலையில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநதாதனை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போது, பதிலளிக்க மறுத்து விட்டார்.

spot_imgspot_img

More like this
Related

போதைப்பொருள் வாங்க வீட்டிலிருந்த தொலைக்காட்சியை விற்க முயற்சி: தடுத்த தாயை கொன்ற மகன்!

வத்தளை காவல் பிரிவுக்கு உட்பட்ட ஹெக்கிட்டவில், போதைப்பொருளுக்கு அடிமையான மகன் ஒருவன்,...

மடு விபத்தில் ஒருவர் பலி

மன்னார் - மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45...

மட்டக்களப்பில் கடந்த 9 மாதத்தில் 92 பேர் தற்கொலை மீண்டும் அதிகரிக்கும் தற்கொலைகள்–

மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் 44 வயது பெண் ஒருவர் வீட்டின் அறையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்