“தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள அன்புத் தம்பி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” நடிகர் கமல்ஹாசன்!

Date:

கமல்ஹாசன், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். அவருக்கு தமிழில் மட்டுமல்ல மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இன்று விஜய் தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதை அடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியத் திரைத்துறைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது நடிகர் கமல்ஹாசன் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “தன் திறமையாலும் அன்பாலும் தமிழ் உள்ளங்களை வசீகரித்துள்ள என் அன்புத் தம்பி விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்து வரும் படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு பீஸ்ட்(Beast) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அடுத்து விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவப் புலனாய்வு பிரிவின் பங்கு: நீதிமன்றத்தில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகத் தடுப்புக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்