பிரபல தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூர்யா ; விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Date:

காப்பான், தானா சேர்ந்த கூட்டம் என சில தோல்வி படங்களை சந்தித்து வந்த சூர்யா, சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான ‘சூரரை போற்று’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் கொரானா ஊடரங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை முடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. நாவலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளது. இதற்கிடையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும் வழக்கறிஞராக கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். அதேபோன்று மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் ‘ஆல வைகுந்தபுரமுலு’.வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் த்ரி விக்ரம் இயக்கியிருந்தார். இவர் தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யானை வைத்து பான் இந்தியா படத்தை இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் பவன் கல்யாண் இந்த படத்தில் நடிக்கவில்லை. இதையடுத்து இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கிறது.

spot_imgspot_img

More like this
Related

“இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா?” – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் தொடரும் தாமதம் காரணமாக,...

தவெக வசமானது தாராபுரம் தொகுதி; மதுராந்தகத்திலும் வெற்றி முகம் | இடைத்தேர்தல் முடிவுகள்

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத்...

தமிழ் வம்சாவளி சட்ட நிபுணர் நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை மேம்படுத்தும் பணிகளுக்காக, தமிழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்