கொரோனா இடர்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் சுகாதார முறைமையை மேம்படுத்தும் பொருட்டு மருத்துவ உபகரணங்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வழங்கவுள்ளார்.
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளிற்கு பெருமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கும் செயற்திட்டத்தை சஜித் பிரேமதாசா ஏற்கனவே செயற்படுத்தி வருகிறார்.
இந்த வரிசையில், வரும் செவ்வாய் கிழமை வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளிற்கான மருத்துவ உபகரணம் வழங்கும் செயற்திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் ஆரம்பிக்கிறார்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இதற்கான சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்.
இதன்போது, சம்பிரதாயபூர்வமாக கிளிநொச்சி வைத்தியசாலை நிர்வாகத்திடம் 2.3 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும்
ஏனைய தெரிவு செய்யபபட்ட வைத்தியசாலைகளிற்கு நேரடியாக பொருட்கள் வழங்கி வைக்கப்படும்.