யூரோ கிண்ண தொடர்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

Date:

யூரோ கால்பந்து தொடரில் உலக சம்பியனான பிரான்ஸ் – ஹங்கரி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவடைந்தது.

யூரோ கால்பந்து தொடரில் நேற்று புடாபெஸ்ட் நகரில் ‘எஃப்’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் – ஹங்கேரி அணிகள் மோதின. 14வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் கரீம் பென்சீமா இலக்கை நோக்கி அடித்த பந்து கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது.

31-வது நிமிடத்தில் ஹங்கேரி அணியின் இரு டிபன்டர்களுக்கு இடையே பந்தை அற்புதமாக கரீம் பென்சீமாவுக்கு தட்டிவிட்டார் பிரான்ஸின் கிளியான் பாப்பே. அந்த சமயத்தில் கோல்கீப்பர் மட்டுமே நேருக்கு நேர் இருந்த நிலையில் கரீம் பென்சீமா பந்தை கோலாக மாற்றத் தவறினார்.

முதல் பாதியில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட நேரத் தில் ரோலண்ட் சல்லாயிடம் இருந்து பந்தை பெற்ற ஹங்கேரியின் அட்டிலா ஃபியோலா விரைவாக கடத்திச் சென்று கோல் அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதியில் ஹங்கேரி 1-0 என முன்னிலை பெற்றது.

66வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தாக்குதல் ஆட்டம் தொடுத்தது. இதன் விளைவாக கிளியான் பாப்பே இலக்குக்கு மிக அருகில் இருந்து பந்தை பொக்ஸின் மையப்பகுதிக்குள் தட்டிவிட்டார்.

அப்போது அதை ஹங்கேரி டிபன்டர் வில்லி ஆர்பன் சரியாக தடுக்கத் தவறினார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அன்டோனி கிரீஸ்மன் பந்தை கோல் வலைக்குள் திணிக்க ஆட்டம் 1-1 என்ற சமநிலையை எட்டியது.

90 நிமிடங்கள் முடிவடைந்த நிலையில் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் 5வது நிமிடத்தில் தாஸ் லெமரின் உதவியுடன் பந்தை பெற்ற ரபேல் வரேன், பொக்ஸின் மையப்பகுதியில் இருந்து தலையால் முட்டி கோல் வலைக்குள் தள்ள முயன்றார். ஆனால் பந்து வலது புறம் விலகிச் செல்ல ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவடைந்தது.

இங்கிலாந்து- ஸ்கொட்லாந்து ஆட்டமும் சமனிலை

முன்னதாக லண்டனில் உள்ள வெம்பிலி மைதானத்தில் ‘டி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து – ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல்களின்றி சமனிலையில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தை கோல்களின்றி சமனிலையில் முடித்ததன் மூலம் நொக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் இங்கிலாந்து அணிக்கு சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய ஆட்டம்

இத்தாலி – வேல்ஸ்; நேரம்: இரவு 9.30
சுவிட்சர்லாந்து – துருக்கி; நேரம்: இரவு 9.30
நேரலை: சொனி சிக்ஸ்

spot_imgspot_img

More like this
Related

ஈரான் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்தது ஓமான்

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் தூதரிடம் ஓமான் ஞாயிற்றுக்கிழமை...

மாணவர்களை டெங்கு காய்ச்சலிலிருந்து பாதுகாக்க, சீருடை விதிகளைத் தளர்த்த பாடசாலைகளுக்கு அனுமதி

டெங்குவிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நுளம்புக்கடியிலிருந்து சிறந்த பாதுகாப்பை...

சம்பந்தனுக்கு பொது இடத்தில் நினைவுத்தூபி அமைக்கக்கூடாது

இலங்கை தமிழரசு கட்சியின் மறைந்த முன்னாள் தலைவர் இரா. சம்பந்தன் இரண்டு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்