நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சாய் பல்லவி, பிரேமம் என்கிற மலையாள படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர், நாக சைதன்யாவுக்கு ஜோடியாக லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விராட பருவம் போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகும் படத்தில், அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ள இப்படத்தை பிரபல டோலிவுட் இயக்குனர் சேகர் கமுலா இயக்க உள்ளார். நடிகை சாய் பல்லவி ஏற்கனவே ‘மாரி 2’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படத்தில் இடம்பெறும் ரவுடி பேபி பாடலுக்கு இவர்கள் இருவரும் ஆடிய நடனம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது