ட்ரூகாலர் ஆப்பில் க்ரூப் வாய்ஸ் கால் உட்பட மூன்று புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
க்ரூப் வாய்ஸ் காலிங், ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மற்றும் இன்பாக்ஸ் கிளீனர் போன்ற அம்சங்களை கொண்டு வரும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஒரு அப்டேட்டை ட்ரூகாலர் உருவாக்கியுள்ளது.பயனர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறுகிறது.
க்ரூப் காலிங் அழைப்புகள் ஒரே நேரத்தில் எட்டு நபர்களுடன் “எல்லை தாண்டிய” குரல் அழைப்புகளைச் செய்வதற்கான திறனை வழங்கும்.அதேசமயம் ஸ்மார்ட் எஸ்எம்எஸ் ஸ்பேமை பில்டர் செய்யவும், பயனுள்ள தகவல்களை வகைப்படுத்தவும் மற்றும் கட்டணங்கள் சார்ந்த விடயங்களை உங்களுக்கு நினைவூட்டவும் ஒருங்கிணைந்த வழிமுறையைப் பயன்படுத்துகிறது.
கடைசியாக, புதிய இன்பாக்ஸ் கிளீனர் அம்சம் பயன்படுத்தப்படாத மெசேஜ்களை அகற்றுவதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸை உருவாக்கலாம்.
க்ரூப் வாய்ஸ் காலின் போது, க்ரூப்பில் பயனருக்கு தெரியாமல் ஏதேனும் ஸ்பேம் பயனர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களை அடையாளம் காணவும் ட்ரூகாலர் உதவும். மேலும் பயனர்கள் புதிய பங்கேற்பாளர்களை தங்கள் போன் காண்டாக்ட்டில் சேர்க்காமலேயே வாய்ஸ் காலின் போது ஆட் செய்ய முடியும்.
மேலும் இந்த ஆப் ஒவ்வொரு பங்கேற்பாளரின் நகரத்தையும் பிரதிபலிக்கும், மேலும் மற்றொரு பயனர் மற்றொரு அழைப்பில் அல்லது ஆஃப்லைனில் பிஸியாக இருக்கிறாரா என்பதையும் வெளிப்படுத்தும்.
அனைத்து க்ரூப் கால்களும் சமச்சீர் குறியாக்கத்துடன் பாதுகாக்கப்படுகின்றன என்று ட்ரூகாலர் கூறுகிறது. கூடுதலாக, இந்த க்ரூப் வாய்ஸ் கால் அம்சம் ஆனது டயல் பேக் விருப்பத்தையும் வழங்குகிறது, இது ஒரே கிளிக்கில் அதே மாதிரியான அழைப்பை மீண்டும் நிகழ்த்த உதவும்.
ஸ்மார்ட் எஸ்எம்எஸ் எனப்படும் மற்றொரு அம்சமும் ட்ரூகாலரில் சேர்க்கப்படும், இது ஸ்பேமை அடையாளம் கண்டு பில்டர் செய்யவும், பயனுள்ள தகவல்களை வகைப்படுத்தவும், நிலுவையில் உள்ள பேமெண்ட்களை பற்றி நினைவூட்டவும் உதவும்.
இந்தியா, கென்யா, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் உள்ள பயனர்களுக்கு இந்த அம்சம் அணுக கிடைக்கும். இது விரைவில் எகிப்து, இந்தோனேசியா, மலேசியா, சுவீடன் மற்றும் அமெரிக்காவிலும் கிடைக்கும்.
இன்பாக்ஸ் கிளீனர் அம்சத்தின் வழியாக என்னென்ன செய்யலாம்?
பழைய, தேவையற்ற மெசேஜ்களை சில நொடிகளில் அழிக்க பயனர்களுக்கு உதவும் புதிய இன்பாக்ஸ் கிளீனரும் ட்ரூகாலர் ஆப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
மெனுவிலிருந்து அணுக கிடைக்கும் இன்பாக்ஸ் கிளீனர் நீங்கள் எத்தனை பழைய OTPகள் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ்களை குவித்து வைத்துள்ளீர்கள் என்பதைக் காண்பிக்கும், மேலும் ‘கிளீன் அப்’ பட்டனை க்ளிக் செய்ய உங்கள் முக்கியமான தரவைப் பாதிக்காமல் பழைய எஸ்எம்எஸ்ஸை விரைவாகவும் திறம்படவும் அகற்றும்.
இந்த புதிய அம்சங்களைக் காண Android பயனர்கள் Google Play ஸ்டோரிலிருந்து சமீபத்திய ட்ரூகாலர் வெர்ஷனை அப்டேட் செய்யவும்.