24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
ஆன்மிகம்

இறைவனை வழிபடும் போது படைக்க வேண்டிய நைவேத்தியங்கள்!

இறைவனை வழிபடும் போது, அவருக்கு நைவேத்தியங்கள் படைத்து வணங்குவது வழக்கம். அப்படி படைக்கப்படுவதில், எந்த தெய்வத்திற்கு எந்த நைவேத்தியம் படைக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

சிவபெருமான்:

ஈசனுக்கு வெறும் அன்னத்தை நைவேத்தியமாக படைத்தாலே, அவர் அருளைப் பெறலாம். மேலும் வெண் பொங்கல், வடை போன்றவற்றை படைப்பதன் மூலமாகவும் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.

பெருமாள்:

மகாவிஷ்ணுக்கு, ‘இந்த நைவேத்தியம்தான் பிடிக்கும்’ என்று இல்லை. ஆனால் மஞ்சள் நிற உணவு வகைகளை அவருக்கு பிடித்தமானதாக அனைவரும் கருதுகிறார்கள். குறிப்பாக லட்டு, புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் போன்றவை.

கிருஷ்ணர்:

கிருஷ்ணரைப் பற்றி அறிந்த அனைவருக்கும் தெரியும், அவருக்கு வெண்ணெய்தான் பிடித்தமான நைவேத்தியம் என்று. அதோடு குசேலர் கொடுத்த அவல் மீதும் அவருக்கு பிரியம் உண்டு.

சரஸ்வதி

கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு, வெண் பொங்கல்தான் பிரசித்தமான நைவேத்தியம்.

விநாயகர்:

முழுமுதற்கடவுளாக வணங்கப்படும் விநாயகருக்கு, ஏராளமான உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைப்பார்கள். குறிப்பாக மோதகம், அவல் – பொரி, சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை, அப்பம், முக்கனிகள்.

முருகன்:

குறிஞ்சி நிலத்து கடவுளாக வர்ணிக்கப்படுபவர், முருகப்பெருமான். எனவே அவருக்கு தினைமாவு நைவேத்தியம் பிடித்தமான உணவு. மேலும் பழங்கள், வெல்லம், வடை, சர்க்கரை பொங்கல், வேக வைத்து தாளித்த கடலை பருப்பு போன்றவையும் நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

மகாலட்சுமி:

செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமிக்கு, அரிசிப் பாயசம் என்றால் மிகவும் பிரியம். மேலும் அனைத்து வகையான இனிப்பு பலகாரங்களும் இந்த தேவிக்கு படைப்பார்கள்.

ராகு-கேது:

இவர்கள் அசுர ரூபங்கள் என்பதால், இவர் களுக்கு கருப்பு நிற உணவுப் பொருட்களான கடுகு, கருப்பு எள்ளில் செய்த உணவுகள் நைவேத்தியமாக படைப்பார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நல்லூர் கந்தன் கொடியேற்றம்!

Pagetamil

நல்லூர் கந்தனுக்கு கொடிச்சீலை எடுத்து வரும் நிகழ்வு

Pagetamil

நல்லூர் திருவிழா: காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

Pagetamil

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா

Pagetamil

மேஷம் முதல் மீனம் வரை: தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2024 – குரோதி வருடம் எப்படி?

Pagetamil

Leave a Comment