25.4 C
Jaffna
January 16, 2025
Pagetamil
இலங்கை

எமது வளங்களை சுரண்டி, எம்மை முட்டாளாக்குகிறது யாழ் ஆயர் இல்லம்; முல்லைத்தீவை தனி மறைமாவட்டமாக்குங்கள்: பீற்றர் இளஞ்செழியன் பிரளயம்!

முல்லைத்தீ மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் ஆயர் இல்லம் வெளியிட்ட அறிக்கை நகைப்புக்குரியது எனவும், முல்லைத்தீவு வளத்தினை பயன்படுத்தியே யாழ் ஆயர் இல்லம் வாழ்கிறது எனவும் இலங்கை தமிழரசுகட்சியின் மத்தியகுழு உறுப்பினரும்,வாலிபர் முன்னணியின் பொருளாளரும், முல்லைத்தீவு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவருமான பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

பீற்றர் இளஞ்செழியன் நடாத்திய ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

உப்பமாவெளி, சுவாமிதோட்டம் பகுதிகளில் மணல் அகழ்வு தொடர்பில் இடத்திற்கு சென்று வெளிக்கொண்டு வந்துள்ளோம். இது குறித்து யாழ் ஆயர் இல்லம் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் சட்டவிரோதமாக குவிக்கப்பட்ட மண்ணுக்குள் உண்மையினை புதைத்து வைக்கப்பட்டுள்ளது போல் தோன்றுகின்றது.

ஆயார் இல்லத்தினால் 2018 ஆம் ஆண்டு இன்னொருவருக்கு உரிய முறையில் மண் அகழ்வை அல்லது அபிவிருத்தியினை செய்யவும் அதே சாசனத்தினை பின்பற்றிய ஆயர் இல்லம் தற்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக தாங்களும் ஒரு மண் குவியலை செய்துள்ளார்கள். அது அப்பட்டமான பொய்.

அவர்கள் ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி அவர்கள் எங்கு எங்கெல்லாம் சென்று அனுமதி பெற்றுத்தான் மண் அகழ்வினை அல்லது மண்குவியலினை மேற்கொள்ளலாமே தவிர அவர்கள் பூஞ்சாட்டி தன்மையான அறிக்கையினை விட்டுவிட்டு மக்களை ஏமாற்றும் தன்மை வருந்தத்தக்க விடயம்.

கனியவளத் திணைக்களத்த்தின் அனுமதி இல்லாமல் அறுதி உறுதி காணிவைத்திருப்பவர் கூட மண் குவியலை செய்யமுடியாது. இவற்றை எல்லாம் அறிந்த ஆயர் இல்லம் இன்னுமொரு பங்குத்தங்தைக்கு மண்அகழ்வினை செய்யுமாறு பணிப்புரை வழங்கியது கேலிக்குரிய விடயம்.

இந்த மண் அகழ்விற்கு எதிராக மக்கள் எவ்வளவோ ஆர்ப்பாட்டம் செய்கின்ற பொழுதும் அதனை ஏற்றுக்கொள்ளாது, தற்பொழுது சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற அந்த பங்குத்தந்தை அவர்களை எதிர்த்து ஆயருடன் கதைத்து தனது உண்மைகளை மறைப்பதற்காக ஆயர் இல்லம் பூச்சாண்டி தனமாக அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

முல்லைவாழ் மக்களையும் அந்த கிராம மக்களையும் யாழ் ஆயர் இல்லம் முட்டாள்களாக நினைக்கக்கூடாது.

ஆயர் இல்லம் தங்கள் காணியில் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கியுள்ளதாக, காணிகள் வழங்கியுள்ளதாக சொல்லியுள்ளது.
யாழ் ஆயரிடம் கேட்கின்றோம் நீங்கள் யாரோனும் ஒருவருக்கு நிதி பெறாமல் இந்த இடத்தினை வழங்கியுள்ளீர்களா? இதனை தெளிவுபடுத்த முடியுமா?

இந்த ஆயர் இல்லம் வெளிப்படையாக குழுவினை அமைத்து நாங்கள் சட்டவிரோதமாக மண் குவியல் செய்யவில்லை என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாமா?

கனியவளத் திணைக்களம் வெளிப்படையாக சொல்லியுள்ளது. அனுமதிபெறாமல் குவிக்கப்பட்ட மணல் என்று நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்டவர்களை உடன் கைது செய்யவேண்டும்என்று நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
ஆயர் இல்லத்தால் மண்குவியல் செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட ஒருவர் மண் மாபியா. இவர் முல்லைத்தீவினை சேர்ந்தவர். இவரின் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அவரை வைத்து இந்த செயற்பாட்டினை செய்துள்ளார்கள். பொலீசாரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்கள் என்பதை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்தாது
இழுத்தடித்துக் கொண்டிருக் கின்றார்கள். இதில் எங்களுக்கு சந்தேகம் இருக்கின்றது. பொலீசாருக்கும் ஏதும் வழங்கப்பட்டு விட்டதா என்றும் கேள்வி எழுப்ப தோன்றுகின்றது.

முல்லைத்தீவு மாவட்டம் நீண்ட ஒரு நிலப்பரப்பினை கொண்ட மாவட்டம். யாழ்மறைமாவட்டம் என்ற பெயரில் யாழ் ஆயர் இல்லம், யாழ் ஆயர் இல்ல காணி என்று சொல்ல முடியாது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கத்தோலிக்கர்களுக்கு சொந்தமான இடத்தினை ஆளுகின்றார்கள்.

திருகோணமலை மாவட்டம் சிறிய ஒரு மாவட்டம். இன்று தனி மறை மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்களை பயன்படுத்திதான் யாழ் மறைமாவட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆளுமையினையும், அனைத்து வளங்களையும் குழிதோண்டி புதைத்து அதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுவாமி தோட்டத்தில் பெறப்பட்ட வருமானங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசத்திற்கு முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை ஆயர் இல்லம் தெளிவுபடுத்த வேண்டும்.

நான் ஒரு கத்தோலிக்கன் என்றவைகயில் வெளிப்படையாக கேட்கின்றேன், முல்லைத்தீவு மாவட்டத்தினை மிகவிரைவாக தனி மறைமாவட்டமாக மாற்றப்பட வேண்டும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருக்கும் வருமானத்தினை நம்பியே அவர்கள் வாழ்கின்றார்கள் என்பது இல்லை என்றால் நிரூபிக்க வேண்டும்.

போரிற்கு பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயர் இல்த்தின் முழுமையான பங்களிப்புடன் கட்டிக்கொடுக்கப்பட்ட ஆலயத்தினை நீங்கள் சுட்டிக்காட்டுங்கள். இங்கிருந்து அனைத்து வருமானங்களும் யாழ்மாவட்டத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஆயர் இதனை வெளிப்படுத்த வேண்டும் முல்லைத்தீவு வாழ் மக்களுக்கு உண்மையினை வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் ஆயர் இல்லம் செய்யும் முழு அடாவடித்தனங்களும் வெளிப்படுத்தப்படும்.

சுவாமி தோட்டத்தின் பின்பகுதியில் ஒரு கோடி ரூபாவிற்கு மேற்பட்ட மண் அகழப்பட்டு இப்போது குளமாக வந்துள்ளது. அந்த மண் எங்கே போயுள்ளது அந்த பணம் எங்கே இருக்கின்றது என்பதையும் ஆயர் வெளிப்படையாக கூறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசியல் கைதிகளை உடனே விடுவியுங்கள் – மனோ கணேசன் எம்பி

east tamil

இன்று காலை வரையான 24 மணித்தியாலத்தில் பதிவான மழைவீழ்ச்சி விபரம்

Pagetamil

18ஆம் திகதி முதல் வடக்கு, கிழக்கில் கன மழைக்கு வாய்ப்பு

Pagetamil

சீகிரியாவில் வெளிநாட்டுப் பெண் திடீர் மரணம்

east tamil

தேசிய மக்கள் சக்தி நிர்வாக அலுவலகம் தாளையடியில் திறந்துவைப்பு

east tamil

Leave a Comment