பயணத்தடையை ஜூன் 21 அன்று நீக்குவதற்கான முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது.
அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, பயணக் கட்டுப்பாட்டை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுட்டிக்காட்டினார்.
பயணத் தடையை நீக்குவதை இன்னும் உறுதிப்படுத்த முடியாது என்றும், இது தொடர்பாக அந்த திகதிக்கு நெருக்கமாக ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் பயணத் தடையை விரிவாக்குவது அல்லது தளர்த்துவது குறிப்பிட்ட நேரத்தில் உள்ள நிலைமையை பொறுத்தது என்பதை சுட்டிக்காட்டினார்.




