எங்க வீட்ல ஏற்கனவே திருடிடீங்க.. வேற வீடு பாருங்க.. வீட்டின் முன் அறிவிப்பு!

Date:

இந்தியாவில் திருட்டு என்பது மிக அதிகமாகிவிட்டது. குறிப்பாக நகரின் வெளிப்புறங்களில் உருவாகிவரும் வீடுகளில் அதிகமாக திருட்டு நடக்கிறது. இப்படியாக ராஞ்சி நகரின் வெளிப்புறப்பகுதியில் உள்ள ஏரியாக்களில் அதிகமாக திருட்டு நடந்து வந்துள்ளது. பல மாதத்தில் ஒரே வீட்டில் இரண்டு மூன்று முறை திருட்டு நடக்கும் சம்பவம் எல்லாம் நடந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் தற்போது தங்கள் வீட்டு வாசிலில் ”
ஏற்கனவே திருடப்பட்ட வீடு, திருடர்களே உங்கள் முயற்சியை வீணாக்காதீர்கள்” என எழுதி போர்டு வைத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் ரேகா தேவி கூறும் போது : “எங்கள் வீட்டில் கடந்த 1 மாதத்தில் மட்டும் 2 முறை திருட்டு நடந்துள்ளது. அதில் எனது நகைககள் மற்றும் 1.5 லட்சம் பணம் ஆகியவற்றை இழந்துள்ளோம். இதற்கு மேல் இழக்க எங்களிடம் எதுவும் இல்லை” என குறிப்பிட்டார்.

அப்பகுதியை சேர்ந்த மனோஜ் குமுார் என்பவர் “கடந்த சனிக்கிழமை எனது மனைவியின் அப்பா, அம்மாவை சந்திக்க சென்றேன். அங்கேயே இரவு தங்கிவிட்டேன் மறு நாள் பக்கத்து வீட்டிலிருப்பவர் என் வீட்டில் திருட்டு நடந்து விட்டதாக போய் செய்தார். பதறிப்போய் வந்து பார்த்தபோது. வீட்டிலிருந்த ரூ2 லட்சம் மதிப்பிலான நகை, மற்றும் ரூ1 லட்சம் மதிப்பிலான பணம் திருடு போயிருந்தது. ”

இது குறித்து அப்பகுதியில் உள்ள மக்கள் பல முறை பொலிசில் புகார் அளித்துள்ளனர் இருந்தாலும் திருட்டு சம்பவம் குறையவில்லை என கூறப்படுகிறது. இதனாலேயே மக்கள் தங்கள் வீடு ஏற்கனவே திருட்டு நடந்த வீடு என திருடர்களுக்கு தெரிவிக்கும் வகையில் போர்டை வைத்துள்ளனர்

spot_imgspot_img

More like this
Related

யா/கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் நேறறு நடைபெற்றது.

நூற்றாண்டு விழாவின் பிரதான நிகழ்வாக கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட பாடசாலை பிரதான நுழைவாயில்...

களுத்துறை யில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் வாழைச்சேனையில் வைத்து கைது

களுத்துறை நாகொடாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்பட்ட ஏறாவூர் ஆறுமுகத்தான்...

இந்திய ஐரெக் பயிற்சிபெற்ற இலங்கையர்கள் அமைப்பு கொழும்பில் அங்குரார்ப்பணம் !

இந்தியா வெளிவிவகார அமைச்சின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்