கரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!

Date:

கரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கரட்டில் நிறைந்துள்ளதால் கரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

கரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கரட்டை உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கரட்.

கரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

* கரட்டில் விட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது.

*. கரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.

*. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கரட் மிகவும் பயன்படுகிறது.

*. தினமும் ஒரு கரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம்.

* நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் கரட் சாறு பருகுவது நல்லது.

* கரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.

* வயிற்றில் கற்கள், புண்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு கரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.

* மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் கரட் சாறு அருந்துவது நல்லது.

* கரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.

* சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம்.

* வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது.

* கரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு, விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்