நடிகர் யோகிபாபு முதல் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுகொண்டுள்ளார்.
தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பெரும்பாலான பிரபலங்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இன்னும் வெகுசிலரே மீதமுள்ளனர். அவர்களும் ஒவ்வொருவராக தங்களின் தடுப்பூசியைப் பெற்று வருகின்றனர்.
தற்போது நடிகர் யோகி பாபு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தைத் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் யோகிபாபு பல படங்களில் நடித்து வருகிறார். ‘தளபதி 65’ மற்றும் ‘வலிமை’ படத்திலும் நடித்து வருவதாகவும் யோகிபாபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.