யாழில் பயணக்கட்டுப்பாட்டில் பயங்கரம்: அலுவலத்திலிருந்து திரும்பிய அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வழிப்பறி!

Date:

யாழ்ப்பாணத்தில் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருந்த போது, கடமை முடிந்து வீடு திரும்பிய அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வழிப்பறி திருடர்களால் திருடப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றது.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இராச வீதி, கரந்தன் சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

கடமை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் தனித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அரச உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிளே திருடப்பட்டது.

ஆள்நடமாட்டமற்ற அந்த பகுதியில் அரச உத்தியோகத்தரை வழிமறித்து திருடர்கள் தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர். கொள்ளையர்களின் திடீர் தாக்குதலை எதிர்பாராத அரச உத்தியோகத்தர் தனது மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பியோடினார்.

திருடர்கள் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அமைதியின்மை: பெண் கைதிகள் அனைவரும் இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை கட்டடங்களுக்கு பாரிய...

அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்

சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் ஒரு வீட்டில் பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக இரத்தினபுரி...

கரூர் நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவது தற்காலிக அரசு பணியாக இருக்க உயர்நீதிமன்றம் நிபந்தனை

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்