மாவட்ட ரீதியிலான நேற்றைய தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தலிருந்தே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் நேற்று 2,789 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 218,923 ஆக உயர்ந்தது.

நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 741 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கொழும்பு மாவட்டத்தில் இருந்து 505 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 397 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 181 பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 145 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 101 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 96 பேர், மட்டக்களப்பு மற்றும் காலி மாவட்டத்தில் இருந்து தலா 67 பேர், அம்பாறை மாவட்டத்தில் இருந்து 66 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து 60 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 57 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 50 பேர், நுவரெியா மாவட்டத்தில் இருந்து 45 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 40 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 29 பேர், மொனராகலை மாவட்டத்தில் இருந்து 19 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 18 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 9 பேர், கிளிநொச்சி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து தலா 8 பேர், , திருகோணமலை மற்றும் பொலன்னருவை மாவட்டத்தில் இருந்து தலா 6 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 35 பேர், முல்லைத்தீவில் இருந்து 3 பேர்,  வெளிநாட்டிலிருந்து வந்த 30 பேர் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்