பிரித்தானியாவில் பரவிய வைரஸ் மாதிரி இலங்கையின் பல பாகங்களில்: இந்திய திரிபுடன் மேலுமொருவர்!

Date:

இந்தியாவில் பரவி வரும் பி .1.617.2 (டெல்டா) கோவிட் திரிபு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட வைரசுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது நபர் இவராவார்.

அத்துடன், பிரித்தானியாவில் பரவும் B.1.1.7 (அல்பா) வைரஸ் தொற்றுடன் பலர் நாட்டின் பல பாகங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனை தெரிவித்தார்.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் ஒரு குழு ஊழியர்களுக்கும் B.1.1.7 (அல்பா) கோவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரித்தானியாவின் கென்ட் பிராந்தியத்தில் பரவிய வைரஸாகும். இந்த தொற்றாளர்கள் அனைவருக்கும் கோவ்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியவர்கள். அனைவரும் இப்போது குணமடைந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், இங்கிலாந்தின்ள கென்ட் பிராந்தியத்தில் வேகமாகப் பரவும் பி .1.1.7 (அல்பா) கோவிட் வகை கொழும்பு, மட்டக்களப்பு, திருகோணமலை, குளியாபிட்டிய, வாரியபொல, மாத்தறை மாவட்டம், ஹபரடுவ, கராபிட்டி மற்றும் திஸ்ஸமஹராம பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டது.

பி .1.411 கோவிட் திரிபு தொற்றாளர்கள் திஸ்ஸமஹராமவிலிருந்து பதிவாகியுள்ளன.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மஹரகம வீட்டில் தீவிபத்து: 3 பேரின் மரணத்தின் காரணம் வெளியானது!

மகரகம, பமுனுவ வீதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில்...

கயிறிழுத்தல் போட்டியில் உயிரிழந்த இளைஞன்

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் உள்ள மிகஹாவெல கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கயிறு...

அணு ஆயுதங்கள் அல்ல, ஈரானின் பலமாக மாறிய புவியியல் அமைவிடம்

ஈரானிடம் அணு ஆயுதம் இல்லாமல் இருக்கலாம் — ஆனால், அத்தகைய நீர்வழிகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்