உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

Date:

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இருவரை நேற்று (09) மாலை கைது செய்துள்ளதுடன், இரண்டு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று மாலை, வவுணதீவு பொலிஸார் பாவக்கொடிச்சேனை மற்றும் நெல்லிக்காடு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள வீடுகளை சுற்றிவளைத்து தேடுதல் மேற்கொண்டனர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டு மீட்கப்பட்டன. அவற்றை வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...

மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி...

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த 11.23 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் பயன்பாட்டிலிருந்த மொத்தம் 11.23 ஏக்கர் காணிகளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்