சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக சாட்சியமளிக்கும்படி 2 ஆசிரியர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர்: உயர்நீதிமன்றத்தில் தகவல்!

Date:

மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாவை வழக்கில் சிக்க வைக்குமாறு, அல்-ஜுஹ்ரியா அரபு கல்லூரியில் இரண்டு ஆசிரியர்கள் குற்றவியல் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்டதாக சட்டத்தரணி எரிக் பாலசூரிய தாக்கல் உயர் நீதிமன்றத்தில் செய்த இரண்டு மனுக்களில் தெரிய வந்துள்ளது.

நேற்று மனுக்கள் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​முன்னிலையான ஜனாதிபதி  எம்.ஏ.சுமந்திரன், இரண்டு ஆசிரியர்களும் சிஐடி அதிகாரிகள் நிர்ப்பந்தத்தால் சட்டத்தரணி  ஹிஸ்புல்லாவை சிக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாக, சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலில் கூறினர்.

“அவர்களுக்கு ஒரு ஹெஜாஸ் ஹிஸ்புல்லா கூட தெரியாது” என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இரு ஆசிரியர்களும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே இரு ஆசிரியர்களும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

“முதல் நாளிலேயே அவர்கள் நீதிவான் முன் வாக்குமூலமளிக்க விரும்புவதாக தெரிவித்தனர், அடுத்த நாள் நிரந்தர நீதிவான் முன் அவர்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய இருந்தனர். உடனடியாக இருவரும் இரு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், ”என்றார்.

நீதிமன்றத்தில் வாக்குமூலமளிப்பதை தடுப்பதற்காகவும், இருவரிடமும் சட்டத்தரணிகளுடன் பேசுவதைத் தடுப்பதற்காகவும் இரு ஆசிரியர்களையும் பிரித்துவிட்டதாக சுமந்திரன் கூறினார்.

“அவர்களது சட்டத்தரணியான திரு.பாலசூரியா, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர்களை சந்தித்து பேசிய போது, அவர்களின் முன்பாக சிஐடியினால் ஒலிப்பதிவு கருவியொன்று வைக்கப்பட்டிருந்தது. அன்றே, தாம்   கட்டாயப்படுத்தப்பட்டதை சட்டத்தரணியிடம் சொன்னார்கள். தாக்கல் செய்யப்பட்ட எந்த அறிக்கையிலும் அவர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இல்லை. அவர்கள் இருவரையும் கைது செய்யும் வரை நீதிமன்றத்திற்கும் அறிவிக்கவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஒரே காரணம் அவர்களிடமிருந்து கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தை பெறுவதாகும், ”என்று அவர் கூறினார்.

இரு ஆசிரியர்களையும் கைது செய்தது, தடுத்து வைப்பதை சுமந்திரன் நீதிமன்றத்தில் சவால் செய்தார்.

இரண்டு ஆசிரியர்களும் நீதிவானின் விளக்கமறியல் உத்தரவாதத்தை மீறி தெற்கு திசையிலும் மற்றவர் வடக்கு திசையிலும் அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இருவரையும் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறைச்சாலைகளுடன் தொடர்பு கொண்டு இருவரையும் கொழும்புக்கு அழைத்து வந்து சட்டத்தரணிகளை அணுக வசதி செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிபதி விஜித் மலல்கொட உத்தரவிட்டார்.

விசாரணையின் போது, ​​சட்டத்தரணிகளின் உரிமைகளுக்கு சிஐடி எவ்வாறு தடையாக இருந்தது என்று சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

“சட்டத்தரணி, சேவை பெறுனர் கலந்துரையாடலின் போது இன்னொருவர்  எப்படி உட்கார முடியும்? சட்டத்தரணி – சேவை பெறுனர் சலுகை புனிதமானது, ”என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சட்டத்தரணிகள் சங்கம் முன்னிலையாகி சிஐடியின் நடத்தை தொடர்பாக தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்ததாக நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

“நாங்கள் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட வேண்டியிருந்தது. சிஐடி மற்றும் ரிஐடியின் இந்த நடத்தை குறித்து எங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன ”என்று சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஆஜரான உபுல் குமாரபெரும தெரிவித்தார்.

இந்த வழக்கு 2021 ஜூன் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நீதிவான் நீதிமன்ற விசாரணை ஜூன் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சீன தயாரிப்பு லேபிள்களை ஒட்டி மோசடி: தெஹிவளையில் அம்பலமான காலணி மோசடி!

தெஹிவளை, கவ்தானாவில் உள்ள ஒரு ரகசிய காலணி உற்பத்தி மற்றும் அசெம்பிளி...

கை,கால் நடுங்க தூக்கி வரப்பட்ட மஹிந்த: மரணிக்கும் முன் நாமலை ஜனாதிபதியாக்க வேண்டுமாம்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ‘ஜன சதன’ (மக்கள் போராட்டம்)...

அராலிச்சந்தி வாள்வெட்டு: நால்வர் கைது!

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்