பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில், பொதுமகனொருவர் அறைந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.
தென்கிழக்கு பிரான்சில் டிரோம் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பார்வையிட்டுத் திரும்பியபோது தடுப்பிற்கு அப்பால் நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கி சென்ற போது, ஒரு நபர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.
இதற்குள், அவரது பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, ஜனாதிபதியை காப்பாற்றினர். அறைந்த நபரையும் பிடித்துக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
#Macron se fait gifler en direct de #Tain pic.twitter.com/tsXdByo22U
— Alex ⚜️ (@AlexpLille) June 8, 2021



