விக்ரம் நடிப்பில் உருவாகி வந்த சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு பாதியளவு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று சீயான் 60. முதன்முறையாக விக்ரம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணியா அமைந்திருப்பதால் அந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்தப் படத்தில் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர்.
விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது. கொரோனா குறைந்ததும் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மிகக் குறுகிய காலத்திலே படத்தின் பாதி படப்பிடிப்பை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். லாக்டவுன் முடிந்ததும் விரைவாக மீதி படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். துருவ் விக்ரம் இந்தப் படத்தில் தனது பகுதியில் நடித்து முடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வாணி போஜன் மற்றும் சிம்ரன் ஆகிய இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். லாக்டவுனை அடுத்து விக்ரம் மற்றும் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லலித் குமார் தயாரிக்கிறார்.