இஞ்சி தின்ன குரங்கு என்று சிலர் திட்டுவதை கேட்டிருப்போம். குரங்கு இஞ்சியை சாப்பிடால் எப்படி இருக்கும் என பார்ப்பது அரிது. இங்கு ஒருவர் குரங்கிற்கு இஞ்சிய கொடுத்து டெஸ்ட் செய்துள்ளார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நாம் சிலரை “இஞ்சி தின்ன குரங்கு போல முகத்தை வைக்காதே” என நம்முடன் சண்டை போட்டு கோபமாக இருப்பவர்களை பார்த்து சொல்லுவோம். ஆனால் அது என்ன இஞ்சி தின்ன குரங்கின் முகம்? என்று என்னைக்காவது யோசித்திருக்கிறோமா? அப்படியோசித்த ஒரு சிலர் குரங்கிற்கு உண்மையிலேயே இஞ்சியை கொடுத்து டெஸ்ட் செய்துள்ளனர். அதை சாப்பிட முயற்சித்த குரங்கு என்ன செய்தது என்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இந்திய வனத்துறை அதிகாரியான Sushant Nanda என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒருவர் தன் கையில் பெரிய துண்டு இஞ்சியை எடுத்துக்கொண்டு குரங்கு இருக்கும் பகுதிக்கு சென்று குரங்கிடம் கொடுக்கிறார். அதை வாங்கிய குரங்கு அந்த இஞ்சியை தன் வாயில் வைத்து டேஸ்ட் செய்தது. உடனடியாக அந்த இஞ்சியை தூக்கி வீசிவிட்டு வித்தியாசமான முகத்தை காட்டியது. இந்த வீடியோ பார்ப்பவர்களை சிரிப்பை வரவழைத்தது. அதானல் இந்த வீடியோவை பலர் பகிர தொடங்கினர் இந்த செய்தியை உருவாக்கிய நேரம் இந்த வீடியோவை சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாத்திருந்தனர்.
बंदर क्या जाने अदरक का स्वाद😊 pic.twitter.com/QGOkqs525E
— Susanta Nanda IFS (@susantananda3) June 6, 2021