பிக்பாஸில் கலந்துகொள்ளும் சில்லுனு ஒரு காதல் நடிகை!

Date:

நடிகை பூமிகா இந்தியின் அடுத்த பிக்பாஸ் சீசனில் கலந்துகொள்ள இருப்பதாகக் கூறப்பட்ட செய்திகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

நடிகை பூமிகா சாவ்லா தமிழில் விஜய் உடன் பத்ரி படத்தின் மூலமாக அறிமுகமானார். அதையடுத்து ரோஜா கூட்டம் படத்தில் நடித்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்தார். தனது அழகான நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் பூமிகா. தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

Bigg Boss 15: Salman Khan's Tere Naam co-star Bhumika Chawla STRONGLY  REFUTES participation rumours – view tweet

இந்நிலையில் நடிகை பூமிகா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு பூமிகா பதிலளித்துள்ளார்.

“போலி செய்திகள் – என்னை பிக்பாஸில் இருந்து அழைக்கவில்லை. அப்படி அவர்கள் அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன். என்னை சீசன் 1, 2, 3 ஆகியவற்றில் பங்குகொள்ள அழைத்தார்கள், அதன்பிறகும் கூட அழைத்தார்கள். ஆனால் நான் செல்ல மறுத்துவிட்டேன். இந்த சீசனில் என்னை அழைக்கவில்லை. நான் தற்போதும் அதை ஏற்க மாட்டேன். நான் பிரபல நடிகையாக இருந்தாலும் என்னை சுற்றி கேமராக்கள் இருப்பதை நான் விரும்புவதில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

இந்தியாவின் நிரந்தர பாலம் 13 அமைக்கும் திட்டத்தின் மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

இந்திய அரசின் மானிய உதவியின் கீழ்  இலங்கையில் புனர்நிர்மானிக்கப்படவுள்ள 13 நிரந்தர...

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்