26.7 C
Jaffna
January 20, 2025
Pagetamil
கிழக்கு

படுக்கையிலேயே உயிரிழந்த நபர்!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவன காரியாலயத்தில் உயிரிழந்த நிலையில் ஆண் (வாய் பேச முடியாத) ஒருவரின் சடலம் இன்று சனிக்கிழமை (06) மீட்டகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றிவரும் 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான செபமாலை ஜெயகாந்தன் குருஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்தின் காரியாலயத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து மாவட்ட செயலகத்திற்கு கடமைக்கு சென்றுவருகிறார். இரவில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டுவரும் இவர் வழமைபோல நேற்று வெள்ளிக்கிழமை கடமையில் இருந்து திரும்பி அங்கு இரவு உணவை உண்டபின் காரியாலய கதவைப் பூட்டிவிட்டு படுக்கைக்கு சென்றுள்ளார்.

சம்பவதினமான இன்று காலை 11 மணி ஆகியும் காரியாலய கதவு திறக்கப்படாததையடுத்து கதவை உடைத்து உள் சென்றபோது அங்கு அவர் படுத்தபடுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தும் படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அன்புச்செல்வ ஊற்று அறக்கட்டளையில் நினைவு தினமும் நல உதவியும்

east tamil

திருவள்ளுவர் சிலைக்கும் தடை: கல்முனையில் நிலைமை!

Pagetamil

சேருநுவர-கந்தளாய் வீதியில் பஸ் விபத்து – 14 பேர் காயம்

east tamil

எரிபொருள் பவுசர் – முச்சக்கரவண்டி விபத்து

east tamil

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி – சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

east tamil

Leave a Comment