வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

Date:

வவுனியாவிற்கு பி.சி.ஆர் இயந்திரத்தினை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு மேற்கொண்டிருந்தார்.

வவுனியாவில் கொரனா தொற்று தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வதற்கு பி.சி.ஆர் இயந்திரம் இல்லாத நிலையில் யாழ்ப்பாணத்திற்கே மாதிரிகளை அனுப்ப வேண்டிய நிலை காணப்படுவதாக சுகாதார தரப்பு சுட்டிக்காட்டிய நிலையில் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் விசேட சந்திப்பொன்றினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டிருந்தார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இவ் விசேட சந்திப்பில் பிசிஆர் இயந்திரத்தின் தேவை மற்றும் அதனை இயக்குவதற்கு உரிய ஆளணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன் தற்போது அவ் இயந்திரம் இன்மையால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மாவட்ட செயலாளர்இ பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்இ வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர்இ பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சுகாதார செவை மற்றும் ஏனைய துறைசார் திணைக்கள தலைவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கலந்துரையாடல் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வவுனியாவிற்கு பிஇசி.ஆர் இயந்திரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன்.அத்துடன் வவுனியாவில் சுகாதார துறையினரின் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை கப்பல் எரிந்தமையினால் மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்டபோது பாணந்துறை முதல் வடக்கு நோக்கி மா ஓயா வரை பாதிப்பு இருந்தது. அது இயல்பாகவே வெகு விரைவில் அற்றுப்போய்விடும். அவர்களுக்கு முதற்கட்டமாக 5000 ரூபா வழங்கப்படுகின்றது. மேலும் பாதுpப்புக்களை பார்த்து உதவி வழங்கப்படும் என தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

வர்த்தகரை சுட்டுக்கொல்ல பதுங்கியிருந்த 2 பேர் கைது!

ஹொரணைப் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரைச் சுட்டுக் கொல்வதற்காக, அவரது வீட்டின்...

மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி

ரம்பேவ, பொருலுஹின்ன கிராமத்தில் நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பெண்கள்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள்: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை ஆரம்பம்…

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள “அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்” (Protection of...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்