வீட்டில் தனியாக இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு : 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

Date:

உத்தரபிரேசத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரயாகராஜ் மாவட்டத்தில் லோஹ்ரா மஸ்ராவைச் சேர்ந்த சங்கர்லாலின் மனைவி மால்டி தேவி. இவர்களின் மகன்கள் சஞ்சய் மற்றும் அஜய் ஆகியோர் மும்பையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மால்டிதேவி (46) தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், மால்டி தேவி மீது ஆசிட்டை வீசி விட்டு, அங்கிருந்து தப்பியோடினர்.

ஆசிட் பட்டதால் வலி தாங்க முடியாமல் மால்டி தேவி அலறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அவரது வீட்டு முன்பு கிராம மக்கள் ஒன்று திரண்டனர். பிறகு, போலீசுக்கு தகவல் தெரிவித்து விட்டு, மால்டி தேவியை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையெ, வீட்டில் தனியாக இருந்த மால்டி தேவி மீது ஆசிட் ஊற்றியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

spot_imgspot_img

More like this
Related

பலாலியில் 17ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுவிப்புப் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்...

இலங்கைக் கடற்பரப்பில் தவிக்கும் ஈரானியக் கப்பல்களுக்கு உடனடியாக நேசக்கரம் நீட்டுக!

வளைகுடா நாடுகளில் நிலவும் தொடர்ச்சியான அதிகாரப் போராட்டங்கள் மற்றும் மோதல் நிலைகள்...

களுத்துறை நாகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வாழைச்சேனையில் கைது!

களுத்துறை நாகொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்