திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து 09 கைதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்காக இன்று (24) மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12ஆம் திகதி ஹோமாகம சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்குகொண்டு வரப்பட்ட கைதியே தொற்றுக்குள்ளாகியுள்ளார். அவர், மூதூர் நீதிமன்றம், திருகோணமலை மேல் நீதிமன்றங்களிற்கு வழக்குத் தவணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1