மற்றவர்கள் கமெண்ட் குறித்து கவலையில்லை – ரசிகர்களுக்கு நடிகை ரைசா பதிலடி!

Date:

உடை அணியும் விவகாரத்தில் மற்றவர்கள் குறித்து எனக்கு எவ்வித கவலையும் இல்லை என நடிகை ரைசா தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர்தான் நடிகை ரைசா. ‘வேலை இல்லாத பட்டதாரி’, ‘பியார் பிரேமா காதல்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளார். சமீபத்தில் முகப்பொலிவு சிகிச்சை எடுக்க சென்றிருந்தார் ரைசா. அப்போது மருத்துவர் பைரவி என்பவர் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி முகம் வீங்கிய நிலையில் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மற்றவர்கள் கமெண்ட் குறித்து கவலையில்லை – ரசிகர்களுக்கு நடிகை ரைசா பதிலடி
இதையடுத்து நீண்ட நாட்கள் சமூக வலைத்தள பக்கம் வராத ரைசா கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் சட்டை பட்டன்களை திறந்துவிட்டபடி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை பார்த்த ரசிகர்கள் கலாச்சாரத்துக்கு எதிரான இந்த மாதிரியான புகைப்படங்கள் சமூகத்திற்கே அழுக்கு என கண்டப்படி கமெண்ட் செய்திருந்தனர்.

மற்றவர்கள் கமெண்ட் குறித்து கவலையில்லை – ரசிகர்களுக்கு நடிகை ரைசா பதிலடி
இதனால் டென்ஷனான ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இந்த விஷயத்தில் நீங்கள் வெறுப்பை உமிழ்ந்தால் நீங்கள் எதிர்மறை எண்ணங்களால் கொண்டவர் என்று அர்த்தம். இதே எண்ணங்களுடன் வாழ்ந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ முடியாது. எதிர்மறை எண்ணங்கள் வாழ்க்கையில் அதே சிந்தனையோடு எடுத்து செல்லும். பொதுவாக இதுபோன்ற கமெண்ட்களை படிப்பதில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து சென்று விடுவேன் என்று கேஷுவலாக பதிலளித்துள்ளார் ரைசா.

மேலும் நடிகை ஒருவர் பிகினி அணிவது சாதாரண விஷயம். இதற்கு கமெண்ட் செய்வதை விடுத்து கல்வி போன்ற ஏராளமான விஷயங்களில் அக்கறை செலுத்துங்கள். எனக்கு விருப்பமானதை உடுத்துவதாகவும், மற்றவர்களை பற்றி எனக்கு கவலையில்லை என ரைசா பதிலடி கொடுத்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற முக்கிய அரசியல் பிரமுகர்கள்

நாட்டின் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரும், தற்போது காவலில் உள்ளவருமான ஷிரான் பாசிக்,...

நாட்டை குழப்ப முனைந்தவர்களின் பேச்சுக்களின் நீதிமன்றத்தில்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக, வவுணதீவு முகாமில் உள்ள இலங்கை...

கிளிநொச்சியில் புலிகளின் முகாம்: கதை விட்டவர் ‘களி சாப்பிடுகிறார்’!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிக் காட்சி மூலம், அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்